ஏ.ஆர்.ரஹ்மானின் '24' டிராக் லிஸ்ட்

  • IndiaGlitz, [Thursday,April 07 2016]

சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள '24' படத்தின் பாடல்கள் வரும் 11ஆம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகும் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் 6 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். அவற்றை தற்போது பார்ப்போம்.


1. நான் உன்' என்று தொடங்கும் முதல் பாடலை அரிஜித் சிங் மற்றும் சின்மயா பாடியுள்ளனர். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

2. மெய் நிகர' என்ற 2வது பாடலை சித் ஸ்ரீராம், சனாமொய்டுட்டி, ஜொனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலையும் மதன்கார்க்கி எழுதியுள்ளார்.

3. புன்னகையே' என்று தொடங்கும் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுத அதை ஹரிச்சரண், ஷாஷா திரிபாதி ஆகியோர் பாடியுள்ளனர்.

4. ஆராரோ' என்று தொடங்கும் பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். இந்த பாடலை மதன்கார்க்கி எழுதியுள்ளார்.

5. மை டுவின் பிரதர்' என்று தொடங்கும் பாடலை ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணன், ஹிரிடே கட்டானி ஆகியோர் பாடியுள்ளனர்.

6. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'காலம் என் காதலி' என்று தொடங்கும் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். பென்னி தயால், ஷஷவந்த் சிங் மற்றும் அபெய் ஜொத்புர்கர் பாடியுள்ளனர்.

More News

ஒரே மாத இடைவெளியில் ஹாட்ரிக் அடிப்பாரா சமந்தா?

கோலிவுட், டோலிவுட் ஆகிய இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருவதோடு இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் சமந்தா நடித்து வருகிறார்...

'காக்கா முட்டை'க்கு கிடைத்த மேலும் ஒரு அந்தஸ்து

தனுஷின் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான 'காக்கா முட்டை' திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது, உலக திரைப்பட விழாக்களில்....

விஜய் அம்மாவுக்கு பிடித்த அஜித் படங்கள்

இளையதளபதி விஜய்யின் தாயார் என்ற அடைமொழி மட்டுமின்றி சிறந்த திரைக்கதை ஆசிரியர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களில் திகழ்ந்தவர்...

மனிதன்' டிராக்லிஸ்ட் வெளியீடு

'கெத்து' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த 'மனிதன்' திரைப்படம் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...

சட்டமன்ற தேர்தலை குறிவைக்கும் பாபிசிம்ஹா

பாபிசிம்ஹா நடித்த 'கோ 2' திரைப்படத்தில் தற்கால அரசியல், டாஸ்மாக், வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ளதால்...