ஏ.ஆர்.ரகுமானின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்.. இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு..!

  • IndiaGlitz, [Thursday,April 18 2024]

தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகவும் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களித்து சாதனை படைக்க வேண்டும்.

அனைத்து மக்களும் குறிப்பாக இளைஞர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெற்று உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் என்னால் முடிந்ததை நான் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதன் முதலாக வாக்கு செலுத்துபவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளார்.

ஏஆர் ரகுமானின் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

திடீரென காணாமல் போன யுவன்ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம்.. என்ன நடந்தது?

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென டெலிட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்துவிட்டார்கள்: மன்சூர் அலிகான் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!

வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று திடீரென பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சன் டிவி சீரியல் நடிகருக்கு இன்று திருமணம்..  மணமகள் யார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா' என்ற தொடரின் நாயகனுக்கு இன்று மகாபலிபுரம் அருகே உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடந்த நிலையில் சின்ன திரையுலகினர் குவிந்து

ஜெயம் ரவி படம் உள்பட இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்? முழு விவரங்கள்..!

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த 'சைரன்' உட்பட இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளன என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

நீ கன்னித்தன்மையை எப்போது இழந்தாய்? மகனிடம் அம்மா கேட்கும் கேள்வியா இது? நடிகைக்கு குவியும் கண்டனம்.!

பிரபல நடிகை தனது மகனிடம் 'நீ எப்போது கன்னித்தன்மையை இழந்தாய்' என்ற கேள்வி கேட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் 'ஒரு அம்மா மகனிடம் கேட்கும் கேள்வியா இது? என்று நெட்டிசன்கள் கடும்