close
Choose your channels

உலகம் முழுவதும் சுற்றப்போகும் ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஹேண்ட்ஸ் அவுண்ட் தி வேர்ல்ட்' 

Saturday, February 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் உள்பட இந்திய திரைப்படங்களில் இசையமைக்கும் பணிகளில் பிசியாக இருந்தாலும் அவ்வபோது தனிப்பாடல்களை கம்போஸ் செய்து வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் உலகின் முன்னணி இசைக்கலைஞர்களுடன் இணைந்து அவர் ‘ஹேண்ட்ஸ் அவுண்ட் தி வேர்ல்ட்’ என்ற பாடலை கம்போஸ் செய்யவுள்ளார். இந்த பாடலை ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ் என்பவர் எழுதுகிறார். கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த பாடல் உருவாக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தும் பாடலாக இந்த பாடல் இருக்கும் என்றும் இந்த பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பாடலை உலகம் முழுவதும் மேடையில் பாடி, அதில் கிடைக்கும் வருமானம் காலநிலை மாற்ற திட்டங்களுக்கு செலவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுற்றப்போகும் ஒரு பாடலை நம்மூர் இசைக்கலைஞர் கம்போஸ் செய்கிறார் என்பது நம் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமையே என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.