சித்தர் பாடலுக்கு கம்போஸ் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்: எந்த படத்திற்காக தெரியுமா?

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சித்தர் பாடல் ஒன்றுக்கு கம்போஸ் செய்ததாகவும் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த பாடல்கள் பெரும்பாலும் வார்த்தைகள் தெளிவாக கேட்காது என்ற குற்றச்சாட்டு இருக்கும். ஆனால் அதே நேரத்தில் அவருடைய மெலடி பாடல்களில் வார்த்தைகள் மிகவும் துல்லியமாகக் கேட்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பார்த்திபன் நடித்து இயக்கிய உலகின் முதல் நான்லீனர் திரைப்படமான ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தில் ஒரு சித்தர் பாடல் இடம்பெற்றுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் கதைக்கு கடுவெளி சித்தர் எழுதிய பாடல் பொருத்தமாக இருக்கும் என்று பார்த்திபனிடம் கூறியதாகவும் அந்த பாடலை கேட்ட பார்த்திபன் இந்த பாடல் இந்த படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என ஆச்சரியமாக கேட்டதாகவும் கூறினார்.

இதனையடுத்து அந்த பாடல் அந்த வீடியோவில் ஒலிக்கிறது. இந்த பாடலின் முழுவடிவம் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான கடுவெளி சித்தர் பாடலின் முதல் சில வரிகள் இதோ:

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

More News

பிரதமருடன் செல்பி எடுத்து கொண்ட  தமிழ் நடிகை: வீடியோ வைரல்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் நடிகை ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பெண் இயக்குனர் படத்தின் சர்ச்சை போஸ்டர்: இயக்குனரின் பதில் என்ன தெரியுமா?

பெண் இயக்குனர் ஒருவர் இயக்கிய படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த சர்ச்சைக்கு இயக்குநர் என்ன பதில் அளித்துள்ளார் என்பதை பார்ப்போம்.

விஜய்-லோகேஷ் படத்தில் LCU? ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்திலும் LCU இருக்கும் என்ற தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்களின் ஆச்சரியமடைந்துள்ளனர்.

சூப்பர் கண்ணா: 'ராக்கெட்டரி' படம் குறித்து ரஜினிகாந்த் கூறியது என்ன தெரியுமா?

மாதவன் நடித்து, இயக்கி, தயாரித்த 'ராக்கெட்டரி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்தன.

எட்டு திக்கும் வரவேற்பை பெற்ற தனுஷின் 'கேப்டன் மில்லர்' வீடியோ

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்”  அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது !