தொகுப்பாளினி இந்தியில் பேசியதால் மேடையில் இருந்து கீழே இறங்கியது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி, இசை அமைத்து, தயாரித்த ‘99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தின் புரமோஷன் சென்னையில் நடைபெற்றபோது தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் ஏஆர் ரஹ்மான் மேடையை விட்டு கீழே இறங்கிய வீடியோ கடந்த மாதம் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இது குறித்து ஏற்கனவே தொகுப்பாளினி தரப்பில் இருந்து விளக்கமளித்த நிலையில் தற்போது ஏஆர் ரஹ்மான் இது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். ‘99 சாங்ஸ் திரைப்படம் இந்தி உள்பட பல மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் ஹிந்தி புரமோஷன் ஏற்கனவே முடித்துவிட்ட நிலையில் அன்றைய தினம் சென்னையில் தமிழக ரசிகர்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனால் தொகுப்பாளினியிடம் நான் ஏற்கனவே ’தமிழில் தான் பேசவேண்டும், அதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தேன்.

ஆனால் அவர் அந்த படத்தில் நாயகனான எஹான் அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஒரு சில வார்த்தைகள் இந்தியில் பேசினார். அதனால் நான் அவரிடம் ‘ஹிந்தி’ என கூறிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினேன். இது முழுக்க முழுக்க ஒரு ஜோக் தான் எந்தவிதமான சீரியஸ் நடவடிக்கையும் இல்லை. அதன் பிறகு நிகழ்ச்சி எப்பொழுதும் போல் சுமூகமாகவே நடந்தது. ஒரு சிலர் நான் கோபப்பட்டதாக கமெண்ட் செய்தனர். அது முழுக்க முழுக்க தவறு’ என்று ஏஆர் ரஹ்மான் அளித்துள்ளார்.
 

More News

'குக் வித் கோமாளி' பிரபலங்களுடன் இணைந்த 'பிக்பாஸ்' பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் ஃபினலே நிகழ்ச்சி ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருது தொலைந்துவிட்டதா? ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பகீர் தகவல்!

சமீபத்தில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது ஆஸ்கார் விருதுகள் தொலைந்து விட்டதாகவும்

பாடல்களே இல்லாத படத்தில் வாணிபோஜன்: ஹீரோ யார் தெரியுமா?

பாடல்களே இல்லாமல் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நாயகியாக வாணிபோஜன் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் நடித்து வருகிறார் 

நயனுடன் கொச்சிக்கு பறந்த விக்னேஷ் சிவன்: என்ன விசேஷம்?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படத்தில் ஒன்றாக பணிபுரிந்ததிலிருந்து காதலர்களாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்

துபாய்க்கு ஜாலி பயணம் செய்த பிக்பாஸ் காதலர்கள்: வைரல் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் காதலர்களாக மாறிய ஜோடி தற்போது ஜாலி பயணமாக துபாய் சென்றுள்ளதன் புகைப்படம் வைரலாகி வருகிறது