close
Choose your channels

ஒரே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 14 பாடல்கள்: மார்ச் 20ல் ரிலீஸ்

Thursday, March 19, 2020 • தமிழ் Comments

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது பிசியான இசைப்பணியிலும் ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தை தயாரித்து அந்த படத்திற்கு இசையமைத்தும் வருகிறார். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

எஹான் பட், எடில்சி வர்காஸ், மனிஷா கொய்ராலா, லிசா ராய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ‘99 சாங்ஸ்’ திரைப்படத்தில் 14 பாடல்கள் இருப்பதாகவும் அனைத்து பாடல்களும் வரும் 20ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவிருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கொரோனா காரணமாக உலக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையில் ரஹ்மானின் பாடல்கள் உலகில் உள்ள அனைத்து இசைப்பிரியர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz