வெளிவராத படத்தின் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வீடியோ வைரல்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை வெளிவராத படத்தின் பாடல் ஒன்றின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’,  விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’, மணிரத்னம் இயக்கியுள்ள ’பொன்னியின் செல்வன்’ மற்றும் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ’இரவின் நிழல்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடலொன்றை கம்போஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் உள்ள பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டதாகவும், இந்த பாடல் எந்த படத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிவிற்கு பெரும்பாலானோர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்திற்கான பாடல் என்று பதிலளித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்து இந்த பாடல் எந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்து இருப்பார் என்பதை கமெண்ட் பாக்ஸில் உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள்.

More News

வாய்ப்பு இருந்தும் அவுட்டாக்க மறுத்த விக்கெட் கீப்பர்.... வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

ஓமனில் நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டி20 கிரிக்கெட்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': செம அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களின் அப்டேட்டுக்கள் அவ்வப்போது வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்

தனுஷ் உடனான பிரிவை உறுதி செய்தாரா ஐஸ்வர்யா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் பிரபல நடிகர் தனுஷ் ஆகிய இருவரும் 18 ஆண்டுகால தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் திடீரென பிரிவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தனர்.

இந்த வார ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஒரு பார்வை

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் ஐந்து முதல் பத்து படங்கள் வரை ரிலீஸ் ஆகி வரும் நிலையில் அதற்கு இணையாக ஓடிடியிலும் படங்கள் ரிலீஸ் ஆகி வருவதை பார்த்து வருகிறோம்.

செல்வராகவன் - கீர்த்தி சுரேஷின் 'சாணிக்காகிதம்' ரிலீஸ் தகவல்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த 'சாணிக்காகிதம்'  என்ற திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்