close
Choose your channels

ஷங்கர்-ராம்சரண் தேஜா படத்திற்கு அனிருத்துக்கு பதில் இவரா?

Wednesday, March 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண்தேஜா நடிக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் தென்கொரிய நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைக்க அனிருத் ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு படத்திற்கு எப்போது இசை அமைப்பீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், மிக விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் இசையமைக்கப் போவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் குறிப்பிட்ட அந்த தெலுங்கு படம் ஷங்கரின் படமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்.

ஷங்கரின் முதல் படமான ‘ஜெண்டில்மேன்’ படத்தில் இருந்து ஓரிரு படங்கள் தவிர அவருடைய அனைத்து பாடங்களுக்கும் ஏஆர் ரகுமான் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.