ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை..!

  • IndiaGlitz, [Tuesday,September 12 2023]

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் ’மறக்குமா நெஞ்சம்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் செய்த சொதப்பல் காரணமாக டிக்கெட் வாங்கிய பலர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தமிழக அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி காரணமாக சென்னையில் இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

சென்னை பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு ஆணையர் தீபா சத்யன் என்பவரும் சென்னை கிழக்கு சட்டமூலங்கு இணை ஆணையர் திஷா மிட்டல் என்பவரும் காத்திருப்பு பட்டியலுக்கு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யாமல் இருந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை சரியாக திட்டமிடாமல் நடத்திய ஒருங்கிணைப்பாளர்களால் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

செப்.28ல் 5 படங்கள் ரிலீஸ்.. ஒரு படம் திடீரென பின்வாங்கியதால் பரபரப்பு..!

செப்டம்பர் 28ஆம் தேதி 5 திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“மூன்றாம் கண்”  க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! 

Trending entertainment & White horse studios  சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில்,  உருவாகும் திரில்லர் திரைப்படமான  “மூன்றாம் கண்”  Tre

அனிருத் கையில் இத்தனை படங்களா? இன்னும் 2 வருடங்களுக்கு டிரெண்டிங் தான்..!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் கையில் தற்போது 8 படங்கள் இருப்பதாகவும் அவை அனைத்தும் மாஸ் நடிகர்கள் படம் என்றும் தெரியவந்துள்ளது

மீண்டும் காஷ்மீர் செல்லும் 'எஸ்கே 21' படக்குழு.. இந்திய ராணுவம் செய்த உதவி..!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்கே 21' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. சுமார் 75 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில்

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குவியும் ஆதரவு..!

இசைப்புயல் ஏஆர் ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி காரணமாக ஏஆர் ரகுமான் மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு