close
Choose your channels

என் மகளுடன் சண்டை போடும் தகுதி எனக்கு இல்லை: ஏ.ஆர்.ரஹ்மான்

Saturday, April 26, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில், மகள் கதீஜா குறித்த கேள்விக்கு, ‘‘எனது மகளுடன் சண்டை போடும் தகுதி எனக்கு இல்லை’’ என்று கூறியுள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் மகள் கதீஜா புர்காவில் இருப்பது உட்பட, அவரது உடை குறித்து சில வதந்திகள் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது, ‘‘இந்த உலகில் பொய்யான வதந்திகள் மற்றும் எதிர் வினைகளை இணையத்தில் சமாளிப்பது மிகவும் கடனம், ஆனால் என் மகள் அதை சரியாக செய்து வருகிறார் என தனது மகளின் மன உறுதியை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

பொது வாழ்க்கையில் இருப்பதற்கான முடிவை நாம் தான் தேர்வு செய்கிறோம். இங்கு பணக்காரர்களில் இருந்து, கடவுள் வரை, எல்லோருமே விமர்சனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ‘‘என் மகளுக்கு என தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பிரச்சனை என்ன என்றால், அவருடன் சண்டை இடுவதற்கான தகுதி எனக்கு இல்லை’’ என்று கூறினார்.

‘‘என் மகளால் இரண்டு பக்கம் ஈமெயிலை தெளிவாக எழுதி அனுப்ப முடியும், நம்மால் அதை படிக்க மட்டுமே முடியும். அவரிடம், அநேகமாக, ‘அப்பாவுக்கு என் கடிதங்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ‘‘நான் அணியும் உடைக்கும், என் வாழ்க்கையில் நான் எடுக்கும் முடிவுகளுக்கும், என் பெற்றோருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை’’ என கூற விரும்புகிறேன் என, ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment