ரஜினிகாந்த் நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்..!

  • IndiaGlitz, [Sunday,February 04 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மத நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர் என்றும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தை ஒரு மதத்திற்கு ஆதரவானவர் என்றும் சங்கி என்றும் சில நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இது குறித்து ‘லால்சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மத நல்லிணக்கத்தை பேசக்கூடியவர் என்றும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ரஜினிகாந்த் குறித்து கூறிய போது ’ரஜினிகாந்த் மிகப்பெரிய ஸ்டைல் ஐகான். கருப்பாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ஆக வர முடியும் என்று நிரூபித்து காட்டியவர்.

ஆன்மீகத்தையும் சினிமா வாழ்க்கையையும் தனித்தனியாக பார்க்க கூடியவர். அவருடன் பேசுவது, அவர் படங்களுக்காக வேலை பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது. ரஜினிகாந்த் மத நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர், பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர் என்றும் தெரிவித்துள்ளார்.

More News

ரஜினி, கமல், விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்.. அரவிந்த்சாமியின் பழைய வீடியோ வைரல்..!

ரஜினி, கமல், விஜய் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டேன் என நடிகர் அரவிந்த்சாமி கூறிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

விஜய்யால் பல பட வாய்ப்புகளை இழந்தேன்: விக்ராந்த் அளித்த அதிர்ச்சி தகவல்..!

நடிகர் விஜய் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகிய இருவரும்  நெருங்கிய உறவினர்கள் என்ற நிலையில் விஜய்யால் தான் கடந்த 17 ஆண்டுகளில் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக சமீபத்தில்

சிம்பிளா சாரி கேட்டா உடனே உருகிடுவியா? மணிகண்டனின் 'ல்வ்வர்' டிரைலர்..

மணிகண்டன் நடித்த 'லவ்வர்' திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

5வது முறையாக அஜித்துடன் இணைகிறாரா பிரபல இயக்குனர்? மறுபடியும் ஒரு சக்சஸ் கன்பர்ம்..!

அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் ஐந்தாவது முறையாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜோசப் விஜய்.. களத்தில் சந்திப்போம்.. விஜய் அரசியல் வருகை குறித்து தமிழ் இயக்குனரின் பதிவு..!

தளபதி விஜய் நேற்று அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியின் பெயரையே அறிவித்தார். மேலும் அவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாகவும்