'அயலான்' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்.. ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Monday,December 18 2023]

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று பட தயாரிப்பு நிறுவனம் பொங்கல் ரிலீஸ் என்பதை உறுதி செய்தது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் 'அயலான்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

'அயலான்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘அயலா அயலா’ என்ற பாடல் வரும் டிசம்பர் 20ஆம் தேதி புதன்கிழமை வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் மீண்டும் பொங்கல் ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே வெளியான இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

More News

கேப்டனை எப்படி பாத்துகிடனும்ன்னு எங்களுக்கு தெரியும்: பாண்டிராஜுக்கு பிரேமலதா பதில்..

'கேப்டன் விஜயகாந்த்தை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்' என இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த நிலையில்  'உங்கள் இலவச அறிவுரைக்கு நன்றி,

ஜீ டிவியின் 'சரிகமபதநீ' டைட்டில் வின்னரான இலங்கையின் இளங்குயில்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடந்த நிலையில் அதில் ஸ்ரீநிதி என்ற சிறுமி டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் என்றும் அவருக்கு  60 லட்சம்

'தனி ஒருவன் 2' படப்பிடிப்பு எப்போது? இசையமைப்பாளர் மாற்றமா?

 ஜெயம் ரவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு அரவிந்த்சாமி

மாயா, பூர்ணிமா ஒண்ணா இருக்கக்கூடாது.. திடீரென போர்க்கொடி தூக்கும் விசித்ரா..!

பிக் பாஸ் ஏழாவது சீசனில் முதல் நாளிலிருந்து  மாயா மற்றும் பூர்ணிமா  ஒன்றாக இருந்து வருகிறார்கள் என்பதும் இவர்களுடைய கேங்கில் மேலும் சிலர் இருந்து வருவதை அடுத்து பலர் பாதிக்கப்பட்டனர்

'தளபதி 69' படத்தில் இந்த கூட்டணியா? முதல்முறையாக விஜய்யுடன் இணையும் மாஸ் இயக்குனர்..!

 தளபதி விஜய் நடித்து வரும் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில் இந்த படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.