முதல்முறையாக ரசிகர்களுடன் உரையாடும் ஏ.ஆர்.ரஹ்மான்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் தங்களுடைய ரசிகர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் ஒரே தளம் சமூக வலைத்தளங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சமூக வலைத்தளங்கள் பக்கமே வராத மணிரத்னம் கூட சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் உரையாடவுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு அவர் ரசிகர்களுடன் உரையாடவிருப்பதாகவும் சுவாரஸ்யமான கேள்விகளை அவரிடம் ரசிகர்கள் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்த ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததும் அவருக்கு ஆதரவான பல கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. கடைசியில் ஆன்லைனுக்கு இசைக்கடவுள் வந்துவிட்டார் என்றும், இதற்காகத்தான் பல வருடங்கள் காத்திருந்தோம் என்றும், என்னுடைய அனைத்து நிகழ்ச்சிகளையும் கேன்சல் செய்துவிட்டேன் என்றும் கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. இதில் ஒரு விஜய் ரசிகர் ‘மாஸ்டர்’ அப்டேட் குறித்து ஏதாவது சொல்லுங்கள் என்றும் கேட்டுள்ளார்.

More News

சிரஞ்சீவி விடுத்த சவாலை ஏற்பாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் தற்போது வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே.

'நான் சும்மா இருந்தா சும்மா இருக்க மாட்டேன்': வைரலாகும் கவின் வீடியோ

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா படப்பிடிப்பு இல்லாததால் நடிகர், நடிகைகள் தங்கள் சமூக வலைத்தளங்களில் தினமும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பரிசோதனையில் ஜெர்மனி கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி!!! மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!!!

ஜெர்மனியின் Biotechnology நிறுவனம், அமெரிக்க மருந்து நிறுவனமான Pfizer உடன் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதனை செய்யவிருக்கிறது.

மனிதம் வாழ்கிறது; ஒரேநாளில் 70 ஆயிரம் தொழிலாளர்களின் பசியைப்போக்கும் தன்னார்வ அமைப்பு!!!

மும்பை: கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புச் சாராத் தொழிலாளர்களின் பசியை போக்கும்

தளபதி விஜய் மகன் படத்தை தயாரிக்கும் விஜய்சேதுபதி?

தளபதி விஜய் மகன் சஞ்சய் நடிக்கவிருக்கும் முதல் படத்தை விஜய்சேதுபதி தயாரிக்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.