close
Choose your channels

ஃபைனல்ஸ்ல்ல கூட காரக்குழம்பு தானா? கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்

Saturday, April 10, 2021 • தமிழ் Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி வேற லெவலில் மக்களை சென்றடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சி போல் இதுவரை எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியும் புகழ் பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் பைனல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதன் புரமோஷன் வீடியோக்களை விஜய் டிவி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது

இந்த நிகழ்ச்சியின் பைனலில் பல பிரபலங்கள் நேரிலும் ஆன்லைனிலும் தோன்றி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சிம்பு, சந்தோஷ் நாராயணன், பிக்பாஸ் வின்னர் முகின் உள்பட பலர் பைனல் நிகழ்ச்சிக்கு வந்துள்ள காட்சிகள் புரமோஷனில் உள்ளது.

இந்த புரமோஷனில் சிம்புவிடம் ஷிவாங்கி ’SIM-இல் பூ வைத்தால் சிம்பு’ என்று கூற அதை சிம்பு ரசித்தார். இதனை அடுத்து ஆன்லைன் வீடியோ மூலம் தோன்றிய இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் கனியிடம் ’பைனல்ஸ்ல்ல கூட கார குழம்பு வைக்க போகிறீர்களா என்று கலாய்த்து கேட்டது புரமோஷன் வீடியோவின் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz