உலகை உலுக்கும் கேள்வி! 'சர்வம் தாளமயம்' குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Thursday,December 27 2018]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி வரும் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் 'பீட்டரிடம் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா. அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் தான் சர்வம் தாளமயம்' என்று பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் 'பீட்டர்' என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் ஆங்கிலத்தில் மட்டுமே டுவீட்டுகளை பதிவு செய்து வரும் நிலையில் இந்த டுவீட்டை மட்டும் அவர் தமிழில் பதிவு செய்துள்ளார் என்பதும் இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பாலாவின் 'வர்மா' படத்தை ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்

பாலா இயக்கத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து சென்சாருக்கும் சென்று வந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

'விஸ்வாசம்' 'பேட்ட' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படமும், தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படமும் வரும் பொங்கல் விருந்தாக வெளிவருவது உறுதி என்றாலும்

'அடங்கமறு' படத்திற்கு எதிரான வழக்கில் அதிரடி உத்தரவு

ஜெயம் ரவி, ராஷிகண்ணா நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளியான 'அடங்கமறு' திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பிரபல நடிகர்

பொக்ரான் அணுகுண்டு சோதனை மூலம் உலகையே திரும்பி பார்க்க செய்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இந்தியில் தயாராகவுள்ளது.

பழம்பெரும் குணசித்திர நடிகர் காலமானார்

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த பிரபல நடிகர் சீனுமோகன் இன்று காலை காலமானார்.