கைக்குழந்தையுடன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறந்தாங்கி நிஷா!

  • IndiaGlitz, [Wednesday,January 29 2020]

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் அறந்தாங்கி நிஷா. ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் பொதுவாக ஆண் போட்டியாளர்களே வெற்றி பெற்று வரும் நிலையில் அறந்தாங்கி நிஷா தனக்கென ஒரு பாணியில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் ஒரு டிவி நிகழ்ச்சியில் கைக்குழந்தையுடன் கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா கலந்து கொண்டு வரும் நிலையில் சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் கைக்குழந்தையுடன் கலந்து கொண்டார். குழந்தையுடன் வந்திருந்த அறந்தாங்கி நிஷாவுக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.