முடிவுக்கு வந்தது 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'.

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

'ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் 'குக்கூ' புகழ் மாளவிகா நாயர் மற்றும் பசுபதி, ரோபோ ஷங்கர், 'மொட்ட' ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்த படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'. இந்த படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

புதுமுகம்  அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில் , எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் , மாட்லி ப்ளூஸ் இசையில் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' உருவாகி வருகிறது.

இந்த படத்தை இயக்கிய அனுபவம் குறித்து இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் கூறியபோது, ''ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில் , கொடுத்த பட்ஜெட்டில் முடித்து கொடுப்பதே ஒரு இயக்குனரின் முதல் சவாலாகும். இதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். என் மீது பெரிதளவு நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்த தயாரிப்பாளர் ஆரா சினிமாஸ் காவியா மகேஷ்  அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் நிச்சயம் ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும் என உறுதியாக கூறுவேன்' என்று கூறியுள்ளார்.

More News

எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று: தமன்னா

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த கண்ணே கலைமானே' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்தது.

மீண்டும் ரிஸ்க்கான கேரக்டரில் நயன்தாரா?

பிரபலமான நடிகைகள் மாற்றுத்திறனாளி என்ற ரிஸ்க்கான வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். குறிப்பாக காது கேட்காத, வாய் பேசமுடியாத கேரக்டர்களில் நடிப்பது அபூர்வம்.

மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் கத்துக்குட்டி

நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'கத்துக்குட்டி'. இந்த படம் சமீபத்தில் ரீலிஸாகி பலரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்றது

ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு இன்ஸ்பெக்டர் கொடுத்த வித்தியாசமான ட்ரீட்

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வலம் வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, இனிமேல் ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கி அசத்தியுள்ளார்

மும்பையில் பிரபல தமிழ் நடிகையின் ரகசிய திருமணம்

ரஜினியுடன் சிவாஜி, தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம், விக்ரமுடன் 'கந்தசாமி' உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.