திருமணத்திற்கு பின் ஆரவ் பதிவு செய்த முதல் டுவீட்டில் டுவிஸ்ட்!

  • IndiaGlitz, [Tuesday,September 08 2020]

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கும் கௌதம் மேனன் இயக்கிய ’ஜோஷுவா இமைபோல் காக்க’ என்ற படத்தின் நாயகி ராஹேவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது என்ற செய்தியை பார்த்தோம்.

இந்த திருமணத்திற்கு பிக்பாஸ் போட்டியாளர்களான காயத்ரி ரகுராம், ஆர்த்தி, பிந்துமாதவி, ஹரிஷ் கல்யாண், காஜல், வையாபுரி, சினேகன் உள்பட பலர் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கே.எஸ்.ரவிகுமார், சரண் உள்ளிட்ட இயக்குனர்களும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் முதல்முறையாக ஆரவ் தனது டுவிட்டரில் தன்னுடைய மனைவி ராஹேவுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்து அதில், ‘இமை போல் காப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஆரவ் ஆர்மியினர் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆரவ் தனது மனைவி ராஹே நடித்து வரும் படத்தின் தலைப்பிலேயே முதல் டுவிட்டை பதிவு செய்து டுவிஸ்ட் செய்துள்ளதை அனைவரும் ரசித்து வருகின்றனர்.