அரவிந்தசாமியுடன் இணையும் விக்ரம்பிரபு

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அரவிந்தசாமி, அமலாபால் நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் வரும் வெள்ளியன்று அதாவது ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இதே தேதியில் இன்னொரு திரைப்படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதான் 'பக்கா' திரைப்படம்

விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி, பிந்துமாதவி, சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம்புலி, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ள 'பக்கா' படத்தை எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ளார். சி.சத்யா இசையமைப்பில் சரவணன் ஒளிப்பதிவில் சசிகுமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டி.சிவகுமார் தயாரித்துள்ளார். 

முதல்முறையாக அரவிந்தசாமி மற்றும் விக்ரம்பிரபு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ள நிலையில் இரண்டு படங்களும் வெற்றி பெற நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

More News

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு

சமீபத்தில் சீமானை கைது செய்யப் போவதாக ஒரு  வதந்தி பரவியதை அடுத்து நாம் தமிழர் கட்சியினர்களுடன் நடிகர் மன்சூர் அலிகானும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சூர்யா-செல்வராகவன் 'NGK' படத்தின் புதிய அப்டேட்

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'NGK' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட படங்களில் ஒன்று அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இயக்குனர் டீகே'வின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்

வைபவ் நாயகனாக நடிக்கும் காட்டேரி படத்தில் நடிக்க வரலட்சுமி, ஆத்மிகா, மற்றும் சோனம் பாஜ்வா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 

எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கண்டனம்

நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்ததற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில்