close
Choose your channels

எம்ஜிஆர் கேரக்டருக்காக அரவிந்தசாமியின் அசத்தல் மாற்றம்: வைரலாகும் புகைப்படம்

Thursday, November 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ’தலைவி’ என்ற டைட்டிலில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதற்காக அவர் தற்போது தனது தோற்றத்தை வித்தியாசமாக அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே மாற்றியுள்ளார். மீசையின்றி எம்ஜிஆராக மாறியுள்ள அவரது புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து 28 ஹிட் படங்களில் நடித்துள்ளனர் என்பது மட்டுமன்றி ஜெயலலிதாவின் அரசியல் குருவாகவும் இருந்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அதிமுக தலைமை ஏற்ற ஜெயலலிதா அவருடைய கொள்கைகளை பின்பற்றி வந்ததால் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் எம்ஜிஆர் ஒரு தவிர்க்க முடியாத நபர் ஆவார். இந்த கேரக்டரில் நடிக்கும் அரவிந்த்சாமி, எம்ஜிஆரின் தோற்றம் மற்றும் மேனரிசத்தை திரையில் அசத்தலாக கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.