close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தில் அரவிந்த்சாமி? இயக்குனர் இந்த பிரபலமா?

Friday, June 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சூப்பர் ஹிட் ரொமான்ஸ் படத்தை இயக்கிய பிரபலம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

நடிகர் கார்த்தி தற்போது ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ராஜு முருகன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்தி அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படங்கள் குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கார்த்தி நடிக்க இருக்கும் திரைப்படங்களில் ஒன்றை பிரேம்குமார் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த சூப்பர் ஹிட் ரொமான்ஸ் படமான ’96’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் 27வது படமாக அமைய இருக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படம் என கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.