close
Choose your channels

அடல்ட் காமெடி பட இயக்குனரின் அடுத்த படத்தில் அரவிந்தசாமி

Thursday, May 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் கார்த்திக் நடித்த 'ஹர ஹர மகாதேவகி, 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார். இவர் இயக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். நயன்தாரா நடித்த கொலயுதிர்க்காலம்' உள்ளிட்ட ஒருசில தயாரித்த Etcetera எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலு ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர். இவர்கள் இருவரும் சந்தோஷ் ஜெயகுமாரின் முந்தைய படங்களில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.