விக்ரம் போகும்போது ஏன் அப்படி நடந்துகிட்டிங்க.. அர்ச்சனா கேள்விக்கு மாயாவின் ஆவேச பதில்..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று விக்ரம் சரவணன் எலிமினேஷன் ஆனபோது மாயா நடந்துகொண்ட விதம் பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் கூட மாயாவை அழைத்து இனிமேல் அப்படி செய்யக்கூடாது என்று கூற அதற்கு மாயா வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இது குறித்து இன்றைய அடுத்த புரோமோவில் அர்ச்சனா மற்றும் மாயா இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. ’நேற்று விக்ரம் வெளியே போகும்போது நீங்கள் ஏன் அவ்வாறு இருந்தீர்கள்? இத்தனை வாரம் அவன் மேல் வைத்திருந்த பாசத்தை நேற்று ஏன் காட்டவில்லை என்று அர்ச்சனா கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மாயா, ‘எனக்கு அவனை 10 வாரம் தெரியும், நீங்கள் ஒவ்வொரு முறை அடிக்கும் போதும், நான் அவனை தூக்கிவிட்டு இருக்கேன். அதற்காக நான் மனிதாபிமானமாக இல்லை, ஹேட்ரெட் ஆக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நீங்கள் எதிர்பார்ப்பது போல் எல்லாம் நான் நடந்து கொள்ள முடியாது’ என்று காட்டமாக பதில் அளித்தார். இதனை அடுத்து அர்ச்சனா மற்றும் மாயாவுக்கு மீண்டும் சண்டை வரும் போல் தெரிகிறது.

More News

எனக்கு தடை நீங்க தான்.. நான் செஞ்சது புல்லின்னா நீங்க செஞ்சதும் அதுதான்: பிக்பாஸை குறை சொன்ன போட்டியாளர்..!

பிக் பாஸ் தான் எனக்கு தடையானவர், நான் மற்றவர்களுக்கு செஞ்சது புல்லி என்றால் நீங்கள் எனக்கு செய்தது புல்லி என போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் மீது குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகைச்சுவை நடிகர் பெற்ற மூன்றாவது இளங்கலை பட்டம்: ரசிகர்கள் வாழ்த்து..!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே 3.21 மணி நேர ரன்னிங் டைம்.. ஓடிடியில் இன்னும் அதிகம் என அறிவிப்பு.. எந்த படம்?

 திரையரங்குகளில் வெளியாகும் போது 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைமாக இருந்த படம் ஓடிடியில் இன்னும் அதிக நேரம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரவிந்த்சாமிக்கு மட்டும் தானா, எனக்கும் மரியாதை தர வேண்டும்.. ரசிகரின் பதிவுக்கு மோகன்ராஜா பதில்..!

 தமிழ் திரையுலகின் புத்திசாலித்தனமான வில்லன் கேரக்டர் 'தனி ஒருவன்' படத்தில் நடித்த அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யு  கேரக்டர் என்று ரசிகர் ஒருவர் செய்த பதிவுக்கு அந்த கேரக்டரை

போண்டாமணி குடும்பத்திற்கு முதல் நபராக நிதியுதவி செய்த விஜயகாந்த்.. எவ்வளவு தெரியுமா?..

காமெடி நடிகர் போண்டா மணி நேற்று காலமானதை அடுத்து அவரது குடும்பத்திற்கு முதல் நபராக கேப்டன் விஜயகாந்த் நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது