டிக்கெட் டு ஃபினாலேவுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த அர்ச்சனா.. கூடவே இருந்து குழி பறித்தது யார்?

  • IndiaGlitz, [Tuesday,December 12 2023]

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் இருவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் தங்களது முழு பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பிக் பாஸ் திடீரென டிக்கெட் ஃபினாலேவுக்கு செல்லும் தகுதியற்ற இருவரை தேர்வு செய்யும் படி கூறுகிறார்,. இதனை அடுத்து விஷ்ணு, விக்ரமை கூறுகிறார். இதனை அடுத்து தினேஷ் அர்ச்சனாவை கூறுகிறார்.

தினேஷ் கூறும்போது, டிக்கெட் டு ஃபினாலே மதிப்பு என்ன என்பது அர்ச்சனாவுக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை, அதனால் நான் அர்ச்சனாவை தேர்வு செய்கிறேன் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து பெரும்பாலான போட்டியாளர்களின் கருத்தின்படி விஜய் வர்மா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் டிக்கெடு டு ஃபினாலேவுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கிறார்கள் என்று பிக்பாஸ் கூறுகிறார்.

இது குறித்து அர்ச்சனா, விசித்திராவிடம் கூறிய போது ’தினேஷ் கூறிய காரணம் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, உண்மையிலேயே தினேஷ் எனக்கு ரொம்ப குளோஸ், அவர் கூடவே இருந்து அண்ணா அண்ணா என்று கூறினேன் என்று கூறுகிறார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு தினேஷ் மற்றும் அர்த்தனா இடையே சண்டை நடக்கும் போல் தெரிகிறது.

More News

யுவன்ஷங்கர் ராஜா குரலில் 'காலேஜ் சூப்பர் ஸ்டார்.. கவினின் 'ஸ்டார்' பாடல் ரிலீஸ்..!

கவின் நடித்த 'ஸ்டார்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று

உங்களுக்கு தான் தெரியுமே இந்திய சட்ட அமைப்பு... நடிகையின் தற்கொலை குறித்து சின்மயி காட்டமான பதிவு..!

ஜூனியர் நடிகை ஒருவரின் தற்கொலை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள  பாடகி சின்மயி 'உங்களுக்கு தான் தெரியுமே, இந்திய சட்ட அமைப்பை பற்றி' என்று ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.  

2 போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே.. பிக்பாஸ் வைத்த பரபரப்பான டாஸ்க் இதுதான்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் வைக்கப்படும் என்பதும் அந்த டாஸ்க்கில் வெற்றி வருபவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் தெரிந்ததே.

கடந்த ஆண்டு இதே தலைவர் பிறந்த நாளில்.. கார்த்திக் சுப்புராஜின் பதிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல அரசியல்வாதிகளும்,

ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை மற்றும் பிரபலங்கள்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.