close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இணைந்த ஆங்கர் அர்ச்சனா!

Thursday, September 17, 2020 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக ‘டாக்டர்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான பூஜை நடைபெற்று டப்பிங் பணிகளும் ஆரம்பித்துவிட்டன. முதல் கட்டமாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகனுக்கு பிரபல ஆங்கரும், தொலைக்காட்சி பிரபலமுமான அர்ச்சனா டப்பிங் பேசினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
’கோலமாவு கோகிலா’ படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஒரு சில பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz