close
Choose your channels

'தளபதி 64' குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த 'தளபதி 63' தயாரிப்பாளர்

Thursday, October 3, 2019 • தமிழ் Comments

விஜய் நடிக்க உள்ள 64வது திரைப்படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் விஜய், விஜய்சேதுபதி, அனிருத், மாளவிகா மேனன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்

எளிமையாக இந்த பூஜை நடைபெற்று முடிந்ததை அடுத்து, அடுத்த வாரம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைவெளியின்றி நடத்தப்பட்டு, வரும் டிசம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இன்று ’தளபதி 64’ படத்தின் பூஜையை முன்னிட்டு தளபதியின் 63வது படமான ‘பிகில்’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தளபதி விஜய், விஜய்சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சாந்தனு, மாளவிகா உள்பட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Get Breaking News Alerts From IndiaGlitz