'தளபதி 68' டைட்டில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி.. என்ன சொல்லியிருக்கிறார்?

  • IndiaGlitz, [Wednesday,December 20 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. இந்த படத்திற்கு ’பாஸ்’ அல்லது ’பஸ்ஸில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக இணையதளங்களில் வதந்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன,

இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

‘தளபதி 68’ படத்தின் அப்டேட்டுக்களை பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி, தயவு செய்து நிதானமாக இருங்கள். உண்மையான டைட்டிலை வெங்கட் பிரபு விசேஷமாக அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் நிச்சயம் ’பாஸ்’ அல்லது ’பஸ்ஸில்’ அல்ல’ என தெரிவித்துள்ளார்

அர்ச்சனா கல்பாத்தியின் இந்த விளக்கத்தை அடுத்து இந்த படத்தின் டைட்டில் பாஸ் அல்லது பஸ்ஸில் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் என்ன டைட்டில் என்பதை வரும் புத்தாண்டு வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

More News

16 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் மீண்டும் இணையும் காமெடி நடிகர்? 'தளபதி 68' புதிய அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் 16 வருடங்கள் கழித்து விஜய்யுடன் இணைந்துள்ள காமெடி நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

அடிச்சு திருந்தாத பிள்ளையை ஆப்பு வைத்தும் திருத்தலாம்.. நிக்சன் அப்பாவின் கலகல எண்ட்ரி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி  80 ஆவது நாளாக இன்று ஒளிபரப்பாகி வரும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி செல்வதால் கூடுதல் விறுவிறுப்பு இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்டுள்ளது.

ஒண்ணுமே பண்ணக்கூடாதுன்னா என்ன தெரியுமா? நிக்சனுக்கு காதல் ரகசியத்தை சொல்லி கொடுத்த மாயா..!

 பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான மாயா ஆரம்பம் முதலே மிகவும் தந்திரத்துடன் விளையாடி வருகிறார் என்பதும் அவர் தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளை கூட சிரித்துக்கொண்டே எதிர்கொள்ளும்

கண்ட கண்ட நாயோட வாரிசெல்லாம் என் வம்சத்துல பிறக்கணுமா? 'நவயுக கண்ணகி' டிரைலர்.

ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த கதை தான் 'நவயுக கண்ணகி'. இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள இணையத்தில் வைரலாகி வருகிறது.

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா இந்த இளம் நடிகை?

'தளபதி 68' திரைப்படத்தில் ஏற்கனவே சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய மூன்று நாயகிகள் நடித்துவரும் நிலையில் தற்போது மேலும் ஒரு இளம் நடிகை இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.