close
Choose your channels

'பிகில்' ரிலீஸ் தேதி குறித்து அர்ச்சனா கல்பாதியின் முக்கிய அறிவிப்பு

Tuesday, September 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது மின்னல் வேகத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வருவது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்ட போதிலும் தீபாவளி தினமான ஞாயிறன்று வெளியாகுமா? அல்லது அதற்கு முந்தைய வெள்ளி என்று வெளிவருமா? என்ற குழப்பம் ரசிகர்களிடையே உள்ளது

இன்று காலை இந்த படம் தீபாவளி தினமான ஞாயிறு அன்று தான் வெளிவரும் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்து இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘பிகில்’ ரிலீஸ் தேதி குறித்த வதந்திகளை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம். ’பிகில்’ படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்தவுடன் அந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியை நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளோஒம். இந்த திரைப்படம் ஒரு புதிய சாதனையை பாக்ஸ் ஆபீஸில் செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ’பிகில்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறோம் என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் இருந்து ’பிகில்’ திரைப்படம் வெளியாகும் சரியான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சமூகவலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.