'பிகில்' ரிலீஸ் தேதி குறித்து அர்ச்சனா கல்பாதியின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 17 2019]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது மின்னல் வேகத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வருவது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்ட போதிலும் தீபாவளி தினமான ஞாயிறன்று வெளியாகுமா? அல்லது அதற்கு முந்தைய வெள்ளி என்று வெளிவருமா? என்ற குழப்பம் ரசிகர்களிடையே உள்ளது

இன்று காலை இந்த படம் தீபாவளி தினமான ஞாயிறு அன்று தான் வெளிவரும் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்து இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘பிகில்’ ரிலீஸ் தேதி குறித்த வதந்திகளை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம். ’பிகில்’ படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்தவுடன் அந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியை நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளோஒம். இந்த திரைப்படம் ஒரு புதிய சாதனையை பாக்ஸ் ஆபீஸில் செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ’பிகில்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறோம் என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் இருந்து ’பிகில்’ திரைப்படம் வெளியாகும் சரியான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சமூகவலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

More News

டாஸ்க்கில் அசத்திய கவின் - லாஸ்லியா: காதலை மறந்து டைட்டிலை நோக்கி பயணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் காய் நகர்த்தி சாமர்த்தியமாக விளையாடி கொண்டிருந்தபோது ஒருசில வாரங்களில் எதற்காக வந்தோம்

கூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வரும் நிலையில் 7 போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் முண்டியடித்து டைட்டிலை வென்றிட தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

தர்ஷனின் நண்பரை திருமணம் செய்த பிக்பாஸ் 2 போட்டியாளர்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் தர்ஷனின் நெருங்கிய நண்பரான சத்யா

பிவி சிந்துவை காதலிக்கும் 75 வயது முதியவர்: கலெக்டரிடம் மனு!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து வைக்கக் கோரியும் 75 வயது முதியவர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளது

இரண்டு நாட்கள் தள்ளிப்போகும் 'பிகில்' ரிலீஸ்: தமிழ் சினிமாவில் புதிய முயற்சி!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள்