வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும்: 'தளபதி 63' அப்டேட் குறித்து அர்ச்சனா கல்பாதி

  • IndiaGlitz, [Tuesday,June 18 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் இன்று வந்தே தீரவேண்டும் என்று அன்புக்கட்டளை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'தளபதி 63' அப்டேட் குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் கூறியபோது, 'தளபதி 63' அப்டேட் குறித்து என்னிடம் கேட்கும் ரசிகர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். நானும் அப்டேட் வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்களில் ஒருவர்தான். 'தளபதி 63' படத்தின் அப்டேட் வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும். உங்களுடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இரவுபகலாக நாங்கள் பணி செய்து கொண்டிருக்கின்றோம்' என்று பதிவு செய்துள்ளார்.

வரவேண்டிய நேரத்தில் அப்டேட் சரியாக வரும் என அர்ச்சனா கல்பாதி கூறியுள்ளதால் விஜய் பிறந்த நாளன்று அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ஆச்சரியம் காத்திருக்கின்றது என்றே தோன்றுகிறது
 

More News

அரவிந்தசாமியின் பிறந்த நாளில் அடுத்த பட டைட்டில்!

நடிகர் அரவிந்தசாமி இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக அவர் நடித்து வரும் படம் ஒன்றின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது

தளபதி 63 டைட்டில்: இதுவரை உலகமே கேள்விப்படாத ஒற்றை வார்த்தையாம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோகிபாபுவின் 'தர்மபிரபு' சென்சார் தகவல்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு, ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார். அவ்வாறு அவர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் படங்களில் ஒன்று

ஆகஸ்ட் 15ல் எஸ்.எஸ்.ராஜமெளலி தரவுள்ள ஆச்சரியம்!

'பாகுபலி' படத்தின் ஹீரோவாக நடித்த பிரபாஸ் நடித்த அடுத்த படமான 'சாஹோ' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகிய நிலையில்

வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவி படம்: திடீர் ஆச்சரியம்

வரும் வெள்ளியன்று அதாவது ஜூன் 21ஆம் தேதி விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்', 'தனுஷின் 'பக்கிரி' மற்றும் 'தும்பா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.