close
Choose your channels

வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும்: 'தளபதி 63' அப்டேட் குறித்து அர்ச்சனா கல்பாதி

Tuesday, June 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் இன்று வந்தே தீரவேண்டும் என்று அன்புக்கட்டளை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'தளபதி 63' அப்டேட் குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் கூறியபோது, 'தளபதி 63' அப்டேட் குறித்து என்னிடம் கேட்கும் ரசிகர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். நானும் அப்டேட் வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்களில் ஒருவர்தான். 'தளபதி 63' படத்தின் அப்டேட் வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும். உங்களுடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இரவுபகலாக நாங்கள் பணி செய்து கொண்டிருக்கின்றோம்' என்று பதிவு செய்துள்ளார்.

வரவேண்டிய நேரத்தில் அப்டேட் சரியாக வரும் என அர்ச்சனா கல்பாதி கூறியுள்ளதால் விஜய் பிறந்த நாளன்று அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ஆச்சரியம் காத்திருக்கின்றது என்றே தோன்றுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.