500 ஆண்டுகள் பழமையான மனித எலும்பு, மண்டை ஓடுகளால் ஆன சுவர்!

  • IndiaGlitz, [Saturday,February 22 2020]

 

பெல்ஜியத்தின் கதீட்ரல் நகரில் ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றனர். காரணம் செயின் பாவோ என்ற இடத்தில் மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளைக் கொண்டு ஒரு பெரிய சுவரைப் பார்த்ததும் விசித்திரமாக உணர்ந்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கின்றனர்.

மேலும், இந்த எலும்புகளுக்கு வயது சுமார் 500 எனவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பெரியவர்களின் எலும்புகள் மற்றும் தாடை பகுதிகளைக் கொண்டே இந்த சுவர் முழுவதும் உருவாக்கப் பட்டு இருக்கிறது. சுவரில் எலும்புகளுக்கு மத்தியில் ஆங்காங்கே மனித மண்டை ஓடுகளும் வைக்கப் பட்டுள்ளன.

கிறிஸ்துவத மதத்தில் மனிதன் உயிர்த்தெழுவது பற்றிய நம்பிக்கை உண்டு. எனவே கிறிஸ்துவத்தில் இறந்தவுடன் புதைப்பதையே பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் தேவாலயப் பகுதிகளில் இறந்தவர்களைப் புதைப்பதற்காக இடமும் ஒதுக்கப் பட்டு இருக்கும். சில நேரங்களில் புதிதாக இறந்தவர்களைப் புதைப்பதற்கு இடம் தேவைப்படும் போது பழைய கல்லறை முழுவதுமாக அழிக்கப் படும். அதில் இருந்து எடுக்கப் பட்ட எலும்புகளை ஒரு கல்லறை வீட்டில் அடைத்து வைப்பதும் பழக்கமாக இருந்து வருகிறது. முன்பு பிரிட்டனில் ஒரு கல்லறை வீட்டில் எலும்புகள் சேகரித்து வைக்கப் பட்டதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதே போன்ற நிகழ்வுதான் செயிண்ட் போவோவிலும் நடந்திருக்கிறது. செயிண்ட் போவோவில் 942 இல் உருவாக்கப் பட்ட செயிண்ட் பாப்டிஸ்ட்டின் என்ற பழமையான தேவாலயம் ஒன்று இருந்தது. அது புதுப்பிக்கப் பட்டு செயிண்ட் போவோ கட்டப் படுகிறது. இந்த ஆலயம் 1556 இல் முழுவதுமாக அடித்து நொறுக்கப் படுகிறது. இப்படி அடித்து நொறுக்கப் பட்ட தேவாலயத்திற்கு முன்பு சிறிய தேவாலயம் ஒன்றை உருவாக்க முயற்சி எடுக்கின்றனர்.

புதிய தேவாலயத்தை செயிண்ட் போவோ ஆலயத்திற்கு முன்னால் உள்ள கல்லறையில் உருவாக்க முடிவு செய்கின்றனர். இதற்காக கல்லறை முழுவதும் அகற்றப் படுகிறது. அகற்றப் பட்ட கல்லறையில் இருந்த எலும்புகளை தூக்கியெறிய மனமில்லாமல் செயிண்ட் போவோவின் சுவரில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

புதிய தேவாலயம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டு இருக்கிறது. தேவாலயத்தை உருவாக்குவதற்கு முன்பே அந்த இடத்தில் புதைக்கப் பட்ட எலும்புகளுக்கு 200 வயதாகி இருந்ததை தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். ஆக மொத்தம் தற்போது இந்த சுவரில் இருக்கிற எலும்புகள் 500 வயதை எட்டியிருக்கிறது.

மனித எலும்பு மற்றும் மண்டை ஓடுகளால் உருவாக்கப் பட்ட சுவரைப் பற்றி பல தொல்லியல் ஆய்வாளர்கள் தங்களது வியப்பை காட்டி வருகின்றனர். இது பழங்காலத்தின் எச்சம் என்றும் இறந்த மனிதர்களின் மண்டை ஓடு வாழ்க்கையின் அறிகுறிகளை காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர். இந்த மண்டை ஓடுகளுக்கு நடுவில் ஒரு பறவை கூட்டினைப் பார்த்து ஒரு ஆய்வாளர் மேலும் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

1656 இல் அமெரிக்காவில் உள்ள நேபிள்ஸ் நகரத்தில் பிளேக் நோயால் இறந்தவர்களை புதைப்பதற்காக பாமர மக்களுக்காக ஒரு கல்லறை உருவாக்கப் பட்டது. அந்தக் கல்லறையின் எலும்புகள் குவியல்களாக பின்னர் மீட்கப் பட்டது. நேபிள்ஸில் கண்டுபிடிக்கப் பட்ட கல்லறை முழுவதும் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கானது. ஆனால் செயிண்ட் பாவோவில் தற்போது கண்டுபிடிக்கப் பட்டு இருக்கிற எலும்புகளால் ஆன சுவர் இயற்கையாக மரணம் அடைந்த மனிதர்களுடையது. பெரும்பாலும் பெண்களின் எலும்புகளே இங்கு அதிகமாக காணப்படுகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

More News

தூத்துகுடியில் ரஜினியை யார்? என கேட்டவர் திருட்டு வழக்கில் கைது!

உலகமே யார் என்று தெரிந்த ரஜினியை அவமதிக்கும் நோக்கத்துடன் 'நீங்கள் யார்? என கேட்டவர் தூத்துகுடி இளைஞர் சந்தோஷ். தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது

"உலகத் தாய்மொழி தினம்" பிப்ரவரி 21

மொழி ஒரு அழகான ஊடகம். எழுத்துக்களைச் சேர்த்து, வார்த்தைகளைக் கோர்த்து,

ஆபாச நடிகையாகும் ஸ்பீல்பெர்க் மகள் குறித்து ராம்கோபால் வர்மா கருத்து

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஜுராசிக் பார்க் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

திருமணமான பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்

திருமணமாகி குழந்தை உள்ள ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண் தனது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து அவரை

சிவராத்திரி தினத்தில் பக்தி மழையில் நனைந்த தனுஷ்!

இன்றைய சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.