அர்ஜுன் தாஸ் அடுத்த படத்தில் 2 மலையாள ஹீரோக்கள்.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் வெளியான அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் வில்லனாக நடித்து அசத்திய அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் இரண்டு பிரபல மலையாள ஹீரோக்கள் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் ‘மாஸ்டர்’ உட்பட பல படங்களில் வில்லன் இடங்களில் நடித்த அர்ஜூன் தாஸ், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் 'குட் பேட் அக்லி’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் கொடுத்த நிலையில், அடுத்த கட்டமாக அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மோகன்லால் நடித்த 'துடரும்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், அந்த இயக்குனரின் அடுத்த படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தில் ’பிரேமலு’ நாயகன் நஸ்லின் கணபதி ஆகியோர் நடிக்கின்றனர் என்றும், அது மட்டும் அல்லாது பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு TORPEDO' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ArjunDas's Next film🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) May 1, 2025
Also starring Naslen, Ganapathi & FahadhFaasil 🌟
From the director of Thudarum 🎬 pic.twitter.com/ojsUcmgGJ3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments