வசந்தபாலன் இயக்கும் அடுத்த படத்தில் 'மாஸ்டர்' நடிகர்!

’ஆல்பம்’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் வசந்தபாலன் அதன் பின்னர் ’வெயில்’ ’அங்காடித்தெரு’ ’அரவான்’ ’காவியத்தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் ஜிவி பிரகாஷ் நடித்த ’ஜெயில்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வசந்தபாலன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ’தி லிஃப்ட் பாய்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தை தான் வசந்தபாலன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ’கைதி’ ’மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.


 

More News

திடீரென இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை??? முடிவு குறித்து பிசிசிஐ!!!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அங்கு ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளை முடித்து கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

Zombie இருப்பது உண்மையா? விளக்கம் அளிக்கும் வைரல் வீடியோ!!!

அறிவியல் பூர்வமாக இருந்தாலும் சில விஷயங்களை அவ்வளவு எளிதாக நம்பமுடியாது. அப்படியான ஒரு விஷயம்தான் ஜோம்பிஸ் (Zombie).

குட்டிச்சுவரில் அமர்ந்து பிரபுதேவாவுடன் கதைபேசும் முன்னணி நடிகர்… வைரல் புகைப்படம்!!!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவா எப்போதும் துருதுரு வென இருப்பது வழக்கம்.

எனது ரசிகர்கள் 'மாஸ்டர்' படத்தையும் பாருங்கள்: சிம்பு அறிக்கை

தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் நடிகர் சிம்பு தனது ரசிகர்கள் அனைவரும் 'மாஸ்டர்' திரைப்படத்தை பாருங்கள்

என் மகனுக்கு ஈடு இணை யாரும் இல்லை: பாலாஜி குறித்து சுரேஷ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக செல்ல இருப்பதாக தகவல்கள்