ஆக்சன் கிங் அர்ஜூனின் 'நிபுணன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,July 31 2017]

ஆக்சன்கிங் அர்ஜூன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'நிபுணன்' படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்துள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்த படம் சென்னையில் கடந்த வாரம் 15 திரையரங்குகளில் 142 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.45,19,108 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

இதேபோல் அசோக்செல்வன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியான 'கூட்ட்த்தில் ஒருவன்' திரைப்படமும் திருப்திகரமான வசூலை பெற்றுள்ளது. இந்த படம் சென்னையில் கடந்த வாரம் 12 திரையரங்குகளில் 78 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.20,92,607 வசூல் செய்துள்ளது.

More News

இரண்டாவது வாரத்திலும் வசூலில் வெற்றி நடை போடும் 'விக்ரம் வேதா'

மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய 'விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் மற்றும் சமூகவலைத்தளங்களின் ஆதரவு காரணமாக இந்த படம் முதல் வாரத்தில் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றதோடு, இரண்டாவது வாரத்திலும் வசூலில் வெற்றிநடை போட்டு வருகிறது...

ஓவியாவை வெல்வாரா பிந்துமாதவி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று புதிய பங்கேற்பாளராக நடிகை பிந்துமாதவி களமிறங்கியுள்ளார்...

பிக்பாஸில் பிந்துமாதவி! ஓவியாவுக்கு இனிமேல்தான் போட்டியா?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து கொண்டு வருபவர்களிடம் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்டால் உடனே யோசிக்காமல் ஓவியாவின் பெயரை கூறி விடுவார்கள்...

இன்னும் பத்தே நாட்களில் முடியும் ஜி.வி.பிரகாஷ் படம்

கோலிவுட்திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவர் மட்டுமே...

சூப்பர் ஹிட் காமெடி படத்தின் 2ஆம் பாகத்தில் மிர்ச்சி சிவா

மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய தமிழ்ப்படம்' கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் பெரிய நடிகர் முதல் சின்ன நடிகர் வரை அனைத்து நடிகர்களின் படங்களையும் சிவா கலாய்த்திருப்பார்...