சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த இன்றைய பிரபலம்

  • IndiaGlitz, [Monday,June 19 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ரசிகர்களை சந்தித்தபோது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்றும் தனது அரசியல் வருகையை மறைமுகமாக கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சை அடுத்து கிட்டத்தட்ட தினந்தோறும் ரஜினியை பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சமூகநல அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரையுலகினர்களும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியை நேற்று விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்தார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் அவர்களை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் இந்து மக்கள் கட்சியின் தமிழக மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் மற்றும் இராம. இரவிக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் தற்கால தமிழக அரசியல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

More News

காஜல் அகர்வாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவருடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு மிகச்சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கும். அந்த வகையில் அஜித்தின் 'விவேகம்' மற்றும் விஜய்யின் 'தளபதி 61' ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். Ħ

ஒரே பாடலில் சூர்யா-விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்

ஒரே பாடலில் கோலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் தோன்றுவது புதிதல்ல. 'கோ' உள்பட பல படங்களில் இடம்பெற்ற பாடல்களில் தோன்றியுள்ளனர். அந்த வகையில் தற்போது சூர்யா உள்பட முன்னணி நடிகர், நடிகைகள் 'கூட்டத்தில் ஒருவன்' என்ற படத்தின் ஒரு புரமோஷன் பாடலுக்காக தோன்றுகின்றனர்...

தல அஜித் தான் உண்மையான 'சர்வைவர்'. 'விவேகம்' பாடல் குறித்து யோகி பி

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் 'சர்வைவர்' பாடல் டீசர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அந்த பாடலின் முழுவடிவம் வெளிவரவுள்ளது

இந்திய அணியின் படுதோல்வி எதிரொலி: தோனி வீட்டுக்கு பாதுகாப்பு

நேற்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்...

'பீச்சாங்கை', 'உரு', 'தங்கரதம்' ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்கள்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் ஐந்து படங்கள் வரை ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் வெளியான 'பீச்சாங்கை', 'உரு', 'தங்கரதம் ஆகிய படங்களின் சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்...