ரஜினி என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை, இதை மீண்டும் மீண்டும் சொல்வேன்: அர்ஜூன் சம்பத்


Send us your feedback to audioarticles@vaarta.com


ரஜினிகாந்த் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும் இதனை சொல்வேன் என கரூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் வெற்றி பெற்றால் தான் கட்சி தலைவராக மட்டும் இருந்து கொண்டு வேறொருவரை முதல்வராக தேர்வு செய்ய திட்டமிட்டிருப்பதாக ரஜினி கூறியதாக செய்திகள் வெளியானது. இதனை மாவட்ட செயலாளர்கள் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தான் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் முதல்வர் பதவியை இன்னொருவருக்கு விட்டுகொடுத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளை சசிகலா இன்னும் சந்தித்து வருகிறார் என்றும் ஏற்கனவே பேட்டியில் அர்ஜுன் சம்பத் கூறியிருந்தார். இதனையடுத்து இன்று கரூரில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் பேசியபோது ’கட்சிப் பொறுப்பில் இருந்துகொண்டு முதல்வர் பதவியை வேறொருவருக்கு வழங்கும் ரஜினியை கருத்தை தான் நிராகரிப்பதாகவும் ரஜினி எப்போதும் பதவிக்கு ஆசைப்பட்டவர் இல்லை என்றாலும் அவர் தான் முதல்வராக வரவேண்டும் என்றும் அடுத்த தலைமுறை நன்றாக இருக்க அவர் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் இந்த கருத்தை திரும்ப திரும்ப சொல்வதால் அவர் என் மீது கோபப்பட்டாலும் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை என்று பேசியுள்ளார். அர்ஜுன் சம்பத்தின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.