ரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்!

  • IndiaGlitz, [Thursday,December 03 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி அவர்களை நியமனம் செய்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள அர்ஜுன மூர்த்தி அவர்கள் தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவர் பதவியில் இருந்து வருகிறார் என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டின

இதனையடுத்து அவர் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவர் என்று குறிப்பிட்டு இருந்ததை நீக்கிவிட்டு ’தற்போது தலைவருடன் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில் ’தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் பாஜகவில் இருந்து விலகி ரஜினியின் கட்சிக்கு மாறி உள்ளதாக தெரிகிறது

அதேபோல் காந்திய மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்திவரும் தமிழருவி மணியன் அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது அமைப்பை ரஜினி கட்சியுடன் இணைப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

நிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்!!!

தமிழகத்தின் வங்கக்கடல் பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து கடந்த 26 ஆம் தேதி புதுச்சேரி-மரக்காணம் அருகே கரையைக் கடந்தது.

இப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்!!!

ரஷ்யாவின் ஒரு மாகாணத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட அதுவும் வயதான பெண்களை மட்டும் தாக்கி கொலை செய்யும் பல வித்தியாசமான கொலைகள் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது

பழங்கால சின்னங்களை அவமதிப்பதா??? பிரபல மாடல் அழகி கைது!!!

கி.மு. 27 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு எகிப்து பிரமீட்டிற்கு அருகில் இருந்து அந்நாட்டின் மாடல் அழகி ஒருவர் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

ரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். மேலும் கட்சி வேலை என்பது பிரமாண்டமான வேலை என்றும்,

வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி

சற்றுமுன்னர் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் கூறியதாவது