'100% காதல்' படத்தின் நாயகி திடீர் மாற்றமா?

  • IndiaGlitz, [Tuesday,September 12 2017]

ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று 100% காதல்'. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 100% லவ்' என்ற படத்தின் ரீமேக் என்பதும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக லாவன்யா திரிபாதி நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தி அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி திடீரென மாற்றப்படுவதாகவும், லாவன்யா திரிபாதிக்கு பதிலாக ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் தெலுங்கு படமான 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் உண்மையெனில் ஷாலினி பாண்டேவின் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எம்.சந்திரமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராகவும், பட்லி ஒளிப்பதிவு இயக்குனராகவும் இந்த படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

சசிகலா நியமனம் ரத்து: தினகரன் நியமனங்கள் செல்லாது: அதிமுக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானங்கள்

அதிமுக பொதுகுழுவுக்கு தடை விதிக்க தினகரன் தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து இன்று காலை அதிமுக பொதுக்குழு சென்னையில் தொடங்கியது.

ஒரே மாதத்தில் இரண்டு விஷால் படங்கள் ரிலீஸ்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய த்ரில் திரைப்படம் 'துப்பறிவாளன்' வரும் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

த்ரிஷாவின் முன்னாள் காதலரின் திருமணம்

பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் மற்றும் நடிகை த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

ராய்லட்சுமி நடித்த 'ஜூலி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

கோலிவுட் நடிகை ராய்லட்சுமி அறிமுகமாகியுள்ள பாலிவுட் திரைப்படமான 'ஜூலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

காணாமல் போய் 5 நாட்கள் ஆகியும் கிடைக்காத லலிதகுமாரியின் உறவுப்பெண்

பழம்பெரும் நடிகர் ஆனந்தன் அவர்களின் பேத்தியும், நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி..