லைகா-ஜி.வி.பிரகாஷுடன் இணைகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்

  • IndiaGlitz, [Tuesday,January 19 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' ஆகிய பிரமாண்டமான படங்களை தயாரித்த 'லைகா புரடொக்ஷன்ஸ்' நிறுவனம் அடுத்து ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றை தயாரித்து வருவதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜனவரி 20ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் படம் என்றாலே டைட்டில் வித்தியாசமாக இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. அந்த வகையில் இந்த படத்தின் டைட்டிலும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.

'டார்லிங்' படத்தை இயக்கிய இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கிவரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

பூஜையுடன் தொடங்கியது 'விஜய் 60' படத்தின் இசையமைப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் அவரது 60வது படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது.....

'24' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சமந்தாவுக்கும் சுவாரஸ்ய ஒற்றுமை

சூர்யா, சமந்தா நடிப்பில் விக்ரம்குமார் இயக்கியுள்ள '24' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

அஜித்-சிறுத்தை சிவா கூட்டணியில் மீண்டும் இணையும் பிரபல நடிகை

'வேதாளம்' என்ற வெற்றி படத்தை அடுத்து அறுவை சிகிச்சை செய்து தல அஜீத் ஓய்வு எடுத்து கொண்டிருந்தாலும் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வந்து கொண்டே இருக்கின்றது. ...

'கெத்து' தமிழ் வார்த்தைதான். ஆதாரத்துடன் கூறும் உதயநிதி

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் 'கெத்து' திரைப்படம் சென்சார் அதிகாரிகளால் 'யூ' சர்டிபிகேட் பெற்றிருந்தும் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை....

விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு கிடைத்த செல்பி வாய்ப்பு

'நானும் ரெளடிதான்' வெற்றிப்படத்திற்கு பின்னர் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பெற்றுவிட்ட விஜய்சேதுபதி நடித்த மூன்று படங்கள் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது....