close
Choose your channels

'அயோக்யா' படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏ.ஆர்.முருகதாசின் 2 குடும்பங்கள்

Saturday, May 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா நடித்த 'அயோக்யா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. 'டெம்பர்' படத்தின் ரீமேக்காக இருந்தாலும் இயக்குனர் தனது வித்தியாசமான திரைக்கதையால் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றார். குறிப்பாக இரண்டாம் பாதியும் கிளைமாக்ஸ் டுவிஸ்டும் படம் பார்த்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் தனது உதவியாளர் வெங்கட் மோகனின் முதல் படத்தை பார்த்து பாராட்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினர்களுடன் வருகை தந்து படக்குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதுமட்டுமின்றி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்' படக்குழுவினர்களும் 'அயோக்யா' படத்தை பார்க்க வருகை தந்திருந்தனர். ஏ.ஆர்.முருகதாசின் குடும்பத்தினர்களும், அவரது 'தர்பார்' குடும்பத்தினர்களும் ஒரே நேரத்தில் 'அயோக்யா' படம் பார்க்க வந்து இயக்குனர் வெங்கட்மோகனை திக்குமுக்காட செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.