close
Choose your channels

அர்னால்ட் முதுகில் காலால் உதைத்த மர்ம நபர்! வைரலாகும் வீடியோ

Sunday, May 19, 2019 • தமிழ் Comments

பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் பிரிடேட்டர், டெர்மினேட்டர் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தின் மேயராகவும் இருந்த இவர் தற்போது 'ஜர்னி டூ சைனா' மற்றும் 'டெர்மினேட்டர் டார்க் ஃபேட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 'அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அர்னால்ட் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி குறித்து அவர் அதிகாரிகள் சிலரிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவர் அர்னால்ட் முதுகில் தனது இரண்டு கால்களாலும் உதைத்து கீழே விழுந்தார். இதனையடுத்து கீழே விழுந்த அந்த நபரை அர்னால்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அர்னால்ட் தரப்பினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அர்னால்டை முதுகில் தாக்கிய நபர் யார்? எதற்காக தாக்கினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz