close
Choose your channels
U Turn

மணிரத்னம் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தரும் இசை விருந்து

Sunday, September 2, 2018 • தமிழ் Comments

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் என நான்கு ஹீரோக்கள் உள்பட மல்டி ஸ்டார்கள் நடித்து வரும் படம் 'செக்கச் சிவந்த வானம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் 5ஆம் தேதி படத்தின் இசையமைப்பாளரும் ஆஸ்கார் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் மேடையில் பார்வையாளர்கள் முன் கம்போஸ் செய்து இசை விருந்து தரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.