close
Choose your channels
Kaatrin Mozhi

கேரள வெள்ள நிவாரணம்: சிறிய உதவியாக பெரிய தொகை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

Monday, September 3, 2018 • தமிழ் Comments

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அம்மாநிலமே உருக்குலைந்தது. தற்போது வெள்ளம் வடிந்துவிட்டாலும் லட்சக்கணக்கானோர் வீடின்றி அகதிகள் போல் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கேரள மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகிறது. குறிப்பாக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று முன் தினம் வாஷிங்டன் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளிப்பதாக அறிவித்து அதற்கான காசோலையை வழங்கினார். இந்த தொகை அந்த இசை நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரின் சார்பில் வழங்குவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது 'கேரளாவில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய சிறிய உதவி. அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருக்கும் எங்கள்  குழுவின் இந்த சிறிய உதவி உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.