close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானின் 'சர்வம் தாளமயம்' டிராக்லிஸ்ட்

Monday, November 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிராக்லிஸ்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த ஆறு பாடல்கள் உள்ளது. அவை குறித்து தற்போது பார்ப்போம்.

1. பீட்டர் பீட்டா எது? என்று தொடங்கும் முதல் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்த பாடலை ஜிவி பிரகாஷ், சத்யபிரகாஷ் மற்றும் அர்ஜூன் சாண்டி பாடியுள்ளனர்.

2. மாயா மாயா என்ற 2வது பாடலை மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் எழுதியுள்ளார். இந்த பாடலை சின்மயி பாடியுள்ளார்.

3. சர்வம் தாளமயம் என்ற 3வது பாடலை மதன்கார்க்கி எழுதியிருக்க ஹரிச்சரண், அர்ஜூன் சாண்டி ஆகியோர் பாடியுள்ளனர்.

4. வரல்லாமா என்று தொடங்கும் 4வது பாடலை மதன் கார்க்கி எழுத, இந்த பாடலை ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியுள்ளார்.

5. டிங்கு டிங்கு என்று தொடங்கும் 5வது பாடலை அருண்ராஜா காமராஜ் எழுத, பம்பா பாக்யா மற்றும் அந்தோணிதாசன் பாடியுள்ளனர்.

6. மேலும் 6வது பாடல் ஒன்றை பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.