close
Choose your channels

'99 சாங்ஸ்' ஹீரோவை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்

Friday, April 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பு மற்றும் இசையில் உருவான '99 சாங்ஸ்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே.

இசைப்படமான இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து கதையும் எழுதியுள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் ஏஹான் பட் அவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'நான் உங்களிடம் பெற்ற அன்பை போலவே ரசிகர்களிடம் இருந்து நீங்கள் பெரிய அளவில் அன்பை பெறுவீர்கள்' என்று ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் ஏஹானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஏஹானை அறிமுகம் செய்ததில் ஒரு தயாரிப்பாளராக தான் பெருமை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.