பிரபல நடிகையை கைது செய்ய வைரலாகும் ஹேஷ்டேக்: அப்படி என்ன செய்தார்?

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

பிரபல நடிகையை உடனடியாக கைது செய்ய ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்று மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் என்பவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டகாசத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதேபோல் இங்கு உள்ள இந்து தீவிரவாதத்தையும் சகித்துக் கொள்ள முடியவில்லை’ என்று பதிவு செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெறும் அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு பாலிவுட் நடிகர்கள் உள்பட இந்திய நடிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் யாரும் அந்த பிரச்சினையோடு இந்து தீவிரவாதிகள் என ஒப்பிடவில்லை. ஆனால் வேண்டுமென்றே நடிகை ஸ்வரா பாஸ்கர் இந்துக்களை தீவிரவாதி என்று கூறி வருவதை கூறி வருவது வருத்தத்திற்குரியது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்ற நெட்டிசன்கள் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்களுக்கு உண்மையாகவே தைரியமிருந்தால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குச் சென்று நீல நிற பர்தாவை அணிந்து கொண்டு ஒரு வாரம் இருந்து பாருங்கள். அப்போதுதான் இந்தியாவின் சுதந்திரம் எந்த அளவுக்கு மேன்மையானது என்று உங்களுக்கு புரியும் என்று பத்திரிகையாளர் ஒருவர் ஸ்வரா பாஸ்கருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்வரா பாஸ்கர் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி #ArrestSwaraBhasker என்ற ஹேஷ்டேக்கில் பல நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் சர்ச்சைக்குரிய விதமாக டுவிட்டுகளை பதிவு செய்து வரும் ஸ்வரா பாஸ்கரின் டுவிட்டர் பக்கத்தையும் முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

More News

அல்போன்ஸ் புத்திரன் அடுத்த படத்தில் நயன்தாரா? ஹீரோ யார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்பட ஒரு சில திரைப்படங்களில்

மூடப்படாத விமானத்தில் 600பேர் பயணித்த காட்சி…நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞயாற்றுக்கிழமை காலை தாலிபான்கள் கைப்பற்றிய உடனேயே ஆப்கன் மக்கள் தங்கள் தலைவிதி மாறிவிட்டதாகப் பீதி அடைந்தனர்.

ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி… இப்போதே துவங்கிவிட்ட திக்திக் நிமிடங்கள்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் நேட்டா படை விலகிச்சென்ற பின்பு, வெறும் 10 தினங்களில் ஒட்டுமொத்த

தாடி வளர்க்கனும்… புர்க்கா வாங்கனும்… ஆப்கனில் இருந்து கதறும் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஏற்கனவே கடந்த 2001 வாக்கில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளனர்.

சன் டிவி சீரியலில் நாயகியாக அறிமுகமாகும் பிரபல வில்லி நடிகை.....!

நடிகை சைத்ரா ரெட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகக்கூடிய புதிய சீரியலில் நாயகியாக நடிக்கவுள்ளார்.