பிரபல ஓவியர் வீரசந்தானம் காலமானார்

  • IndiaGlitz, [Friday,July 14 2017]

பிரபல ஓவியரும் தமிழ் பற்றாளருமான வீர்சந்தானம் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. மூச்சுத்திணறல் காரணமாக அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளார்.

சிறந்த ஓவியராக மட்டுமின்றி தமிழ் இனத்தின் மீது மிகப்பெரிய பற்று வைத்திருந்தவர் வீர சந்தானம். மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மிகப்பெரிய சம்பளத்தில் டிசைனராக இருந்த வீரசந்தானம், தமிழ் மக்களுக்காக போராட வேண்டும் என்பதற்காகவே வேலையை விட்டுவிட்டு தமிழகம் திரும்பியவர்.

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஈழத்தமிழர்களுக்கான இவர் வரைந்த ஓவியம் மிகவும் பிரபல்யம். டாஸ்மாக்கை இழுத்து மூடி தமிழ் மக்களை குடிப்பழக்கத்தில் இருந்து போக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை மக்களே அடித்து நொறுக்கு மூடுவதற்கு முன் அரசே மூட முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் வீரசந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி: வீழ்ந்த இடத்திலேயே எழுந்தார்!

திருநங்கை என்றாலே ஒடுக்கப்பட்ட இனமாக இந்த நூற்றாண்டிலும் கருதப்படும் நிலையில் ஒரு திருநங்கை தங்குவதற்கு இடமில்லாமல் பேருந்து நிலையத்தின் தூங்கி காலத்தை கழித்தார். இன்று அவர் அந்த பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள நீதிபதி.

என பொண்ணுக்கு நடிக்கவே தெரியாது! கதறும் காயத்ரியின் தாயார்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்ச்யில் காயத்ரியின் சர்ச்சைக்குரிய பேச்சுதான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாக் ஆக உள்ளது

ரஜினியை திடீரென சந்தித்த திமுக எம்.எல்.ஏ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த போது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசிய நிலையில் மிக விரைவில் அவர் தனிக்காட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

'விவேகம்' படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் சர்வைவா மற்றும் தலை விடுதலை பாடல்கள் இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து 3வது பாடல் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக அனிருத் கூறியதை இன்று காலை பார்த்தோம்...

கலாபவன் மணி மரணத்திற்கும் திலீப் தொடர்பா? அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவத்திற்கு நடிகர் திலீப் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தற்போது திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.