Arulnidhi becomes Action Hero (தமிழ்)

  • IndiaGlitz, [Tuesday,July 16 2013]

ஆக்ஷன் ஹீரோ ஆன அருள்நிதி..!

‘வம்சம்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆன அருள்நிதி அதன்பிறகு நடித்த ‘மவுனகுரு’ படத்திலும் மென்மையான கதாபாத்திரத்திலேயே நடித்தார்.

இப்போது தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தகராறு’ படத்தின் மூலம் அருள்நிதி ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார்.

இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பூர்ணா நடித்திருக்கிறார். அருள்நிதி நண்பர்களாக முருகதாஸ், பவன், தருண் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

மதுரையை சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை படம் என்றாலே அரிவாளுக்கும், அடிதடி குத்து வெட்டுக்கும் பஞ்சம் இருக்காது என்பதை நிரூபிக்கும் விதத்தில் இந்த படத்திலும் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதாம்.

‘வம்சம்’, ‘மவுனகுரு’ படங்களில் அமைதியாக நடித்த அருள்நிதி இந்த படத்தில் கொஞ்சம் அதிரடி காட்டி ஆக்ஷன் ஹீரோ ஆகியிருக்கிறார். தரண் இசையில் பாடல்களும் அதிரடியாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த படத்திற்கு பிறகு சிம்புதேவனின் புதிய படத்தில் அருள்நிதி நடிக்கிறார்.