இந்த காலேஜ்ல்ல நடக்குற எல்லா பிரச்சனைக்கும் காரணம்..... அருள்நிதியின் 'D பிளாக்' டிரைலர்

  • IndiaGlitz, [Monday,January 17 2022]

அருள்நிதி நடிப்பில் உருவாகிய படத்தின் ‘D பிளாக்’ ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவாகிவரும் ‘D பிளாக்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இன்ஜினியரிங் கல்லூரி ஹாஸ்டலில் நடக்கும் சில திகில் சம்பவங்கள் மற்றும் அந்த திகில் சம்பவங்களுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. அருள்நிதி ஜோடியாக அவந்திகா நடித்துள்ள இந்த படத்தில் கருபழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ், மொட்ட ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜயகுமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கத்தில் ரான் யதான் யோஹன் இசையில் அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் அருள்நிதிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ராஜூ, பிரியங்காவுக்கு வருமானம் இத்தனை லட்சங்களா?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் இதில் எதிர்பார்க்கப்பட்டபடியே ராஜூ டைட்டில் வின்னராகவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பிடித்தார்கள் என்பது தெரிந்ததே

'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடிகை சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடினார் என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில்

இனி 24 மணி நேரமும் பிக்பாஸ்: பிரத்யேக ஓடிடி சேனல் ஆரம்பம்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது என்பதும் இதில் டைட்டில் வின்னர் ஆக ராஜூ தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இரண்டாவது இடத்தை பிரியங்கா பெற்றார் என்பதும் தெரிந்ததே

டைட்டில் வின் செய்தவுடன் ராஜூ போட்ட ஒரே ஒரு வார்த்தை டுவிட்!

பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னரான ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சி டைட்டில் பட்டத்தை பெற்றவுடன் ஒரே ஒரு வார்த்தையில் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது

மற்றொரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா 3 ஆவது அலை பாதிப்பு இந்தியாவில் கடும் பதற்றத்தை